IPL_2018: 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

IPL 2018 தொடரின் 47-வது போட்டியில் மும்பை - ராஜஸ்தான் அணிகளின் மோதின. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

Last Updated : May 14, 2018, 08:40 AM IST
IPL_2018: 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் title=

IPL 2018 தொடரின் 47-வது போட்டியில் மும்பை - ராஜஸ்தான் அணிகளின் மோதின. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

மும்பை அணி:-

அந்த வகையில் முதலில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் சிறப்பாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 87 ரன்னாக இருந்தபோது சூர்யகுமார் யாதவ் 38 ரன் எடுத்த ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

எவின் லெவிஸ் 42 பந்தில் 60 ரன்னிலும், இஷான் கிஷான் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குருணால் பாண்டியா 3 ரன் எடுத்து அவுட்டானார். ஹர்திக் பாண்ட்யா 21 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணி:-

இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. முதலில் ஷார்ட்டும், ஜோஸ் பட்லரும் விளையாடினர்.

ஷார்ட் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ரகானே பட்லருக்கு ஓரளவு கம்பெனி கொடுத்தார். இருவரும் இணைந்து 95 ரன்கள் சேர்த்தனர். ரகானே 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 53 பந்துகளில்  5 சிக்சர், 9 பவுண்டரியுடன் 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Trending News