IPL 2018, தகுதி போட்டி 1: சென்னை வெற்றி பெற 140 ரன்கள் தேவை.

IPL கிரிக்கெட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. 

Last Updated : May 22, 2018, 08:52 PM IST
IPL 2018, தகுதி போட்டி 1: சென்னை வெற்றி பெற 140 ரன்கள் தேவை. title=

முதலில் பேட்டிங்கை தொடங்கிய சன்ரைஸ் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி பெற 140 ரன்கள் தேவை. இன்னும் சற்று நேரத்தில் சிஎஸ்கே வீரர்கள் விளையாட உள்ளனர்.

 

 

 


88 ரன்னுக்கு ஆறாவது விக்கெட்டை இழந்த சன்ரைஸ் ஹைதராபாத்

 


69 ரன்னுக்கு ஐந்தாவது விக்கெட்டை இழந்த சன்ரைஸ் ஹைதராபாத்

 


50 ரன்னுக்கு நான்காவது விக்கெட்டை இழந்த சன்ரைஸ் ஹைதராபாத்

 

 


36 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்த சன்ரைஸ் ஹைதராபாத்  

 


இரண்டாவது விக்கெட்டை இழந்த சன்ரைஸ் ஹைதராபாத்.

 

 


முதல் விக்கெட்டை இழந்த ஹைதரபாத். முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் ஷிகர் தவான் அவுட் ஆனார்.

 

 


இன்றைய IPL-ல் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு. தற்போது ஹைதரபாத் அணி ஆடி வருகிறது. 

 

 


IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.

இத்தொடரின் 58_வது போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது போட்டி இதுவாகும். முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சென்னை அணியே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் அணி சிறந்த பந்துவீச்சு அணியாகவும், சென்னை அணி சிறந்த பேட்டிங் அணியாகவும் இருப்பதால், இன்றைய போட்டி பேட்டிங்-பந்துவீச்சு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியாக அமைந்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்த முயலும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

இரு அணிகளின் சமீபத்திய செயல்பாடுகளைக் கொண்டு பார்க்கும்போது சென்னை அணியின் ஆதிக்கம் இன்றைய போட்டியில் அதிகம் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

முன்னதாக, 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பெற்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் (18 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (16 புள்ளி), ராஜஸ்தான் ராயல்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில், புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை வகிக்கும் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் இன்று மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Trending News