IPL 2018: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு!

IPL 2018 தொடரின் 53-வது போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது!

Last Updated : May 19, 2018, 03:50 PM IST
IPL 2018: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு! title=

IPL 2018 தொடரின் 53-வது போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது!

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.

இத்தொடரின் 53-வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. ஜெய்பூர் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வுசெய்துள்ளது.

புள்ளிப்பட்டியலை பொருத்தவரை இருஅணிகளும் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்விகள் பெற்று 12 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன. இதன்படி 5-வது இடத்தில் பெங்களூரு மற்றும் 6-வது இடத்தில் ராஜஸ்தான் அணிகள் இருக்கின்றன.

இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 15-ஆம் நாள் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் பெங்களூரு அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது!

Trending News