கருவுறுதலில் பிரச்சனை இருக்கா? அப்படினா இந்த 10 உணவுகள் வேண்டும்!!

இன்றைய கால கட்டத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருந்து வருகின்றது. அது குறித்து சில இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ!

Updated: May 13, 2018, 05:41 PM IST
கருவுறுதலில் பிரச்சனை இருக்கா? அப்படினா இந்த 10 உணவுகள் வேண்டும்!!

இன்றைய கால கட்டத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருந்து வருகின்றது. எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் ஏற்படுத்தாத இய‌ற்கை முறை‌ ‌சி‌கி‌ச்சை தான் எப்பொழுதும் உடம்புக்கு மிகவும் நல்லது. அதிலும் வீட்டிலேயே இருந்தபடி கருவுறுதலுக்கு சிகிச்சை மேற்கொண்டால் எவ்வளவு எளிது தெரியுமா. 

மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் அதிகம் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனைக்கு பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனைக்கு அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். சிலர் பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம், போலி மருத்துவர்களில் பேச்சை கேட்டு கடைசியில் உயிருக்கே ஆபத்து அளவுக்கு கொண்டு சென்று விடுவார்கள். 

ஆனால் அவ்வாறு சென்று சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

பூண்டு மற்றும் மாதுளை இது போன்ற உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். 

பூண்டின் மருத்து குணம்...!

இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும்.

மாதுளையின் மருத்து குணம்...!

இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் ஆண் சக்தியும் அதிகமாக இருக்கும்.

மேலும், மிளகாய், வாழைப்பழம், தக்காளி, தர்பூசணி, வைட்டமின் சி உணவுகள், ஆப்பிள், முந்திரி போன்றவற்றிலும் அதிக அளவு விந்தணுவின் அளவை அதிகரிக்கும், சக்தி இருப்பதோடு உடலுக்கு நன்மையும் உண்டாக்கும்.