மத்திய அரசை எதிர்க்க ட்விட்டரில் ஆள் திரட்டும் கர்நாடக CM!

ட்விட்டர்-ல் மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் ஆள் திரட்டும் கர்நாடக முதல்வர்!

Last Updated : Mar 24, 2018, 09:06 AM IST
மத்திய அரசை எதிர்க்க ட்விட்டரில் ஆள் திரட்டும் கர்நாடக CM! title=

டெல்லி: மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையைப் பின் பற்றுவதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில், மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகள், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசின், 15-வது நிதி ஆணையம் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையை பின்பற்றுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது ட்டுவிட்டர் பக்கத்தில் இது பற்றிய கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். 

ட்டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது...! 

மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையைப் பின்பற்றினால் தென் மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக போராட தென் மாநிலங்கள் ஒன்றிணையுமாறு பதிவிட்டுள்ள அவர், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்களையும், திமுக செயல்தலைவர் ஸ்டாலினையும் டுவிட்டரில் டேக் செய்துள்ளார்.

 

 

Trending News