அசர வைக்கும் "Kult Impulse" வெறும் ரூ.8999 மட்டுமே!

உள்நாட்டு மொபைல் உற்பத்தியாளரான Kult நிறுவனம் தனது அடுத்த வரவான "Kult Impulse"-னை ரூ.8999-க்கு அறிமுகம் செய்துள்ளது!

Updated: May 14, 2018, 06:37 PM IST
அசர வைக்கும் "Kult Impulse" வெறும் ரூ.8999 மட்டுமே!

புதுடெல்லி: உள்நாட்டு மொபைல் உற்பத்தியாளரான Kult நிறுவனம் தனது அடுத்த வரவான "Kult Impulse"-னை ரூ.8999-க்கு அறிமுகம் செய்துள்ளது!

5.99" HD தொடுதிரையுடன் வெளிவரும் "Kult Impulse" ஆனது 13MP பின் கேமிரா, இரட்டை லெட் பிளாஸ் லைட் வசதியுடன் வருகிறது. அதேவேலையில் 13MP முன்கேமிரா இதன் செல்பி திறனை அதிகரிக்க வழிவகுக்கிறது.

இசைக்கோப்புகளை இசைக்க வைத்தாலும் சுமார் 60 மணி நேரத்திற்கு தாங்கும் அளவில் பேட்டரி திறன் கொண்டுள்ளது இந்த மொபைல் என Kult நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிர்வாக இயக்குனர் நித்திஷ் குப்தா தெரிவிக்கையில்... வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தேவையான தொழில்நுட்பங்களை புகுத்தி இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவே வாடிக்கையாளர்கள் அனைவரது கவனத்தினையும் இது ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளார்.

Kult Impulse -ன் சிறப்பம்சங்கள்...

  • MTK 6739 quad-core processor
  • 4000 mAh பேட்டரி.
  • 3GB RAM, 32GB நினைவக திறன்.
  • Android Nougat 7.1.1. மென்பொருள்.
  • கைரேகை ஸ்கேனர் வசதி.

என பல சிறப்பம்சங்களுடன் வரும் இந்த மொபைல், ரிலையன்ஸ் ஜியோ சலுகை விற்பனையில் பெறுகையில் ரூ.2200 வரையிலான பணத்தினை திரும்பப்பெறும் வசதியும் உட்பட்டுள்ளது.