ஆன்லைன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு....

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு....

Last Updated : Dec 27, 2018, 09:46 AM IST
ஆன்லைன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.... title=

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது மத்திய அரசு....

கடந்த சில வருடங்களில் ஆன்லைன் வர்த்தகம் என்பது இந்தியாவில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அனைவராலும் அடையாளம் காணும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இருப்பினும் இன்னும் தங்களை முழுவீச்சில் செயல்படவிடாமல் தடுக்கும் ஒரு விஷயம் இந்தியாவில் உள்ளது என்று தெரிவிக்கின்றன இந்த நிறுவனங்கள்.

இந்நிலையில், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துகொள்ளவும், போட்டியாளர்களை ஒழிக்கும் வகையிலும் சலுகைகளை வாரி வவழங்கி வருகிறது. இந்த முறைக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு ஆன்லைன் நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுபாடுகள் குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

ஆன்லைன் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்: 

  • நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அனைத்து விற்பனையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சேவை அளிக்க வேண்டும். 
  • தங்களிடம் மட்டுமே ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி, அதிக விலையை நிர்ணயிக்கக் கூடாது. 
  • ஒரு விற்பனையாளர் தன்னிடம் உள்ள பொருள்களில் 25 % மட்டுமே ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்க வேண்டும். 
  • தங்களிடம் மட்டுமே பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்று எந்த விற்பனையாளரையும் ஆன்லைன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. 
  • தாங்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொருள் விற்பனை செய்கிறோம் என்பது போன்ற நிலையை ஏற்படுத்தக் கூடாது. 
  • கேஷ் பேக் என்ற பெயரில் தள்ளுபடி அளிக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பாரபட்சம் காட்டக் கூடாது.  

இந்த புதிய விதிமுறைகள் வரும் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு இல்லாமல் உள்நாட்டு நிதியில் செயல்படும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் நலன்களைக் கருதி இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஸ்னாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களும், பல்வேறு வர்த்தக அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக அமேசான் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தற்போது தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டு சில ஸ்மார்ட்போன் வகைகளை வெளிச்சந்தையில் வர விடாமல் தடுத்து, தங்களிடம் மட்டுமே அது கிடைக்கும் என்று கூறி விற்பனை செய்கின்றன. மேலும், ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில், குறைந்த எண்ணிக்கையில் மட்டும் ஆன்லைனில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து அது மிக அரிதான பொருள் என்ற நிலையை ஏற்படுத்துகின்றன. 

 

Trending News