சிபிஐ அதிகாரிகளுக்கு பாசிட்டிவிட்டி பயிற்ச்சி அளிக்கும் ஸ்ரீ ஸ்ரீ சாமியார்

"வாழும் கலை" அமைப்பின் நிறுவனர் ஆன்மிகவாதியான ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், சிபிஐ அதிகாரிகளுக்கு பாசிட்டிவிட்டி பயிற்ச்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Nov 9, 2018, 06:01 PM IST
சிபிஐ அதிகாரிகளுக்கு பாசிட்டிவிட்டி பயிற்ச்சி அளிக்கும் ஸ்ரீ ஸ்ரீ சாமியார்
Pic Courtesy : PTI

"வாழும் கலை" அமைப்பின் நிறுவனர் ஆன்மிகவாதியான ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், சிபிஐ அதிகாரிகளுக்கு பாசிட்டிவிட்டி பயிற்ச்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, திறமைகள் ஒருங்கிணைந்த நேர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்குவதற்காக சிபிஐ அதிகாரிகளுக்கு மூன்று நாட்களுக்கு வரும் நவம்பர் 10, 11, 12 ஆம் தேதிகளில் "வாழும் கலை" அமைப்பின் மூலம் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் பயிற்ச்சி அளிக்க உள்ளார்.

இதில் வேலை செய்யும் இடத்தில் எப்படி எண்ணங்களை ஒருங்கிணைந்து திறமையாகவும், ஆரோக்கியமாகவும் நேர்மறையான முறையில் செயல்படுவது என ஊக்கம் கொடுக்கும் பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட சும்மார் 150-க்கு மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் கலந்துக் கொள்கிறார்கள். இந்த பயிற்ச்சி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.