இந்தியாவில் முதல் முறையாக செய்தியாளர்கள் இல்லாமல் நியூஸ் சேனல்: டாக்டர் சுபாஷ் சந்திரா

காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை நாட்டில் நடக்கும் அனைத்து விதமான செய்திகளை வழங்க ஜீ ஹிந்துஸ்தான் (Zee Hindustan) சேனல் மூலம் புதிய வடிவத்தில் செய்திகளை வழங்க மறுதொடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2018, 03:51 PM IST
இந்தியாவில் முதல் முறையாக செய்தியாளர்கள் இல்லாமல் நியூஸ் சேனல்: டாக்டர் சுபாஷ் சந்திரா title=

இந்தியாவில் மிகப்பெரிய சேனல்களை கொண்ட நெட்வொர்க்களில் ஒன்று Zee நெட்வொர்க். ஜீ(Zee) வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு மாகாணங்களையும் தங்கள் சேனல்களை ஒளிப்பரப்பி வருகிறது. தற்போது இந்தியாவில் முறையாக செய்தியாளர்கள் இல்லாமல், இந்தியாவின் அனைத்து விதமான செய்திகளை வழங்கும் புதிய முயற்ச்சியை மேற்கொண்டு உள்ளது. 

அதுக்குறித்து ஜீ நெட்வொர்க்கின் நிறுவனரும், ராஜயசபா எம்.பி-யும் ஆனா டாக்டர் சுபாஷ் சந்திரா கூறியதாவது:-

வெவ்வேறு மொழிகளில் அனைவருக்கும் "வணக்கம்" தெரிவித்தார் அவர், இன்று சிறந்த மற்றும் முக்கியமான விசியத்தை குறித்து பேச உள்ளேன். Zee நெட்வொர்கில் சுமார் 13 சேனல்கள் உள்ளன. அதில் வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான செய்திகளை உங்களுக்கு வழங்கி வருகிறது. 

ஆனால் எங்களுக்கு ஒரு யோசனை ஏற்ப்பட்டது. ஒரே சேனலில் நாட்டில் நடக்கும் அனைத்து விதமான செய்திகளை உங்களுக்கு வழங்க வேண்டும் என்று, அதாவது காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை அந்தந்த மாநிலத்தில் நடக்கும் அனைத்து செய்திகளும் மக்களை சென்றடைய, நாங்கள் ஒரு புதிய முயற்சியை ஜீ ஹிந்துஸ்தான் (Zee Hindustan) சேனல் மூலம் "ஒரே நாடு... ஒரே சேனல்" என்ற அடிப்படையில் வழங்க உள்ளோம். ஜீ ஹிந்துஸ்தான் சேனல் மூலம் இந்தியா முழுவதும் இணைக்கப்படும். 

நண்பர்களே.... இது நாட்டின் முதல் சேனலாக இருக்கும், வடக்கை தென்னகத்துடனும், கிழக்கை மேற்க்குடனும் இணைக்கும். நீங்கள் ஒரு செய்தி சேனலை டிவியில் பார்க்கும் போதோ, மொபைலில் பார்க்கும் போதோ அல்லது செய்தி பார்க்க வேண்டும் என நினைக்கும் போதோ, உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது. செய்தி வாசிப்பளர்களின் முகம் தான் ஞாபகம் வரும். இது செய்தி சேனல்கள் ஆரம்பித்த முதலே இப்படி தான் இருந்து வருகிறது.

செய்திவாசிப்பளர்கள் ஒரு செய்தியை வழங்கும் போது, அவர்களுடைய தனிப்பட்ட கருத்தும், அந்த செய்தியுடன் இணைந்து விடுகிறது. இதனால் செய்தியின் உண்மை தன்மை பாதிக்கிறது. இதற்க்கான தீர்வு என்ன? நாங்கள் ஒரு யோசனை செய்தோம், அதை ஜீ ஹிந்துஸ்தான் சேனல் மூலம் செய்ய முடிவு செய்தோம். ஆம், இனிமே செய்தி சேனல்களில் செய்திவாசிப்பளர்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் இல்லாமலேயே அனைத்து செய்திகளும் மக்களுக்கு சென்றடைய முயற்ச்சி செய்யப்பட்டு உள்ளது.

ஜீ ஹிந்துஸ்தான் செய்தி சேனலில் கேமராவுக்கு முன்பு நடைபெறும் செய்தி உங்களுக்கு நேரடியாக காண்பிக்கப்படும். கேமரா நியாயமானது. எப்பொழுதும் பொய் சொல்லாது. உண்மைத்தன்மை பார்வையாளர்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். காட்சிக்கு பின்னல் குரல் மட்டும் ஒலிக்கும். 

இந்தியாவில் முதல் முறையாக செய்திவாசிப்பளர்கள் இல்லாமல் (Anchor Less) செய்திகளை வழங்க ஜீ ஹிந்துஸ்தான் சேனல் வழங்குகிறோம். இதன்மூலம் உங்களுக்கு உண்மையனா செய்திகள் வழங்க முடியும். 

ஜீ ஹிந்துஸ்தான் சேனலில் அரசியல் செய்தி மட்டுமில்லாமல், இந்தியாவின் 6,000 ஆண்டுகால வரலாறு குறித்து பேசப்படும். இதன்மூலம் எதிர்கால தலைமுறையினர் கடந்த கால புகழ்பெற்ற இந்திய வரலாற்றையும் தெரிந்துக்கொள்வார்கள். நிறைய செய்திகள் வழங்க உள்ளதால், செய்தி தகவல் (News Bulletin) நேரத்தை 30 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைக்கப்பட்டு உள்ளது. 

இந்த சேனல் மூலம் மக்கள், எங்கு நல்ல விசியங்கள் நடந்தது, எங்கு பிரச்சனை ஏற்ப்பட்டு உள்ளது. நாட்டில் எங்கு? என்ன? நடக்கிறது என்று அனைத்து விதமான செய்திகளை தெரிந்துக்கொள்ளவும், நிறைய அறிந்துக்கொள்ளவும் உதவும் என்று நான் நம்புகிறேன். இந்த சேனல் மூலம் நாம் தமிழன், மராட்டியன், குஜராத்தியன் என்ற எண்ணத்திற்கு மேலாக, நாம் அனைவரும் இந்தியர் என்ற எண்ணம் உருவாகும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த புரட்சிகர பரிசோதனையை மக்கள் பார்வையிட வேண்டும். இந்த சேனலில் ஏதாவது குறைபாடு இருந்தால், வெளிப்படையாக கூறுங்கள், அதை நாங்கள் திருத்திக்கொள்ள முயல்வோம்" நன்றி. 

இவ்வாறு டாக்டர் சுபாஷ் சந்திரா கூறியுள்ளார்.

Trending News