உதடுகளை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகள்

உதடுகளை மென்மை மற்றும் அழகாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகள் பார்ப்போம். 

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Sep 14, 2018, 07:58 PM IST
உதடுகளை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள சில குறிப்புகள்

உதடு காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி உதட்டை எச்சிலால் ஈரப்படுத்தக்கூடாது என்ன என்றால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாவால் உதட்டில் புண்கள் 

ஏற்படுத்தும் மற்றும் உதட்டில் இருக்கும் கொஞ்சம் ஈரப்பதமும் மறைந்து வெடிப்பு உருவாகும்.

உதடு பாதிப்பு அடைய மற்றுமொரு காரணம் மேக்கப் எனவே உறங்கச் செல்லுவதற்கு முன்பு உதடுகளில் பிரஷ் செய்வது அவசியம். 

கொழுப்புச் சத்துக் குறைவதால் உதடுகள் சுருங்கி விடுகிறது. உறங்குவதற்கு முன்பு சிறிது ஆலிவ் தடவுவது நல்லது. 
மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும் பின்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

# கட் செய்த எலுமிச்ச பழத்தைக் கொண்டு உதடுகளில் தடவும் போது இறந்த செல் நீங்கி புதிய செல் உருவாகுகின்றன. 

# ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவவும் பொது உதடு நிறம் மாறும்.

# மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்.

# புதினா இலைகளை அரைத்து உதடுகளில் தடவினால் கிருமிகள் அழிந்துவிடும்.

# கற்றாழை உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும். 

# கொத்தமல்லி இலைகளின் சாற்றை உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும். 

# நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.

# பீட்ரூட் உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும். 

# பீட்ரூட்டை உதட்டில் தடவவும் பொது உதடு நிறம் மாறும். 

# ஜாதிக்காய்வை அரைத்து உதடுகளில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும். 

# மஞ்சள்தூள் உதடுகளில் தடவும்போது கிருமிகள் அழிந்துவிடுகிறது.

நம்மிடம் இருக்கும் இயற்கையான பொருள் கொண்டு உதட்டை பாதுகாத்து கொள்ள முடியும். மற்றும் வீண்  செலவை குறைத்து கொள்ளவும் முடியும் 

சற்று முயற்சித்து பார்ப்போம்

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close