வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது நிதி நிறுவனங்கள் :முழு விவரம்

வங்கிகளை அடுத்து வீட்டு கடன் நிதி நிறுவனங்கள் (HFC) தங்கள் வீட்டு கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தின.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2018, 07:23 PM IST
வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது நிதி நிறுவனங்கள் :முழு விவரம் title=

வங்கிகளை அடுத்து வீட்டு கடன் நிதி நிறுவனங்கள் (HFC) தங்கள் வீட்டு கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தின.

ஏற்கனவே மக்கள் ரூபாய் மதிப்புச் சரிவு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், வங்கி நிறுவனங்கள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் வீட்டு கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளன. 

வீட்டு கடன் மூலம் தங்களுக்கென ஒரு வீடு வாங்க நினைப்பவர்களுக்கு பெரும் சுமை ஏற்ப்பட்டு உள்ளது. முதலில் வங்கிகள் வீட்டு கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தின. தற்போது வீட்டு நிதி நிறுவனங்களும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றனர்.

இன்று(செவ்வாய்க்கிழமை) இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபினான்ஸ் நிறுவனம், தொடர்ந்து நிதிசுமை அதிகரித்து வருவதால், அதன் காரணமாக, அது வட்டி விகிதங்களை 0.20% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. 

அதாவது பெண் விண்ணப்பதாரர் அல்லது இணை விண்ணப்பதாரர்கள் ரூ.35 லட்சம் வரை வீட்டு கடன் பெற்றால் வட்டி விகிதம் 8.80% ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் ரூ. 35 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் 8.95% ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

Trending News