சில நொடிகளில் அன்னாசிப்பழ ஸ்வீட் சேமியா எப்படி செய்வது :வீடியோ

சுலபமாக சமைக்க கூடிய அன்னாசிப்பழ ஸ்வீட் சேமியா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

Updated: Mar 4, 2018, 12:24 PM IST
சில நொடிகளில் அன்னாசிப்பழ ஸ்வீட் சேமியா எப்படி செய்வது :வீடியோ
Pic Courtesy : Youtube

சமைக்க தெரியாதா? நேரம் இல்லையா? கவலை வேண்டாம். சீக்கிரமாவும், சுலபமாவும் சமைக்கணும் என்றால் சேமியாவை விட சிறந்தவை வேறு எதுவும் கிடையாது என்பதில் ஐயமில்லை. சேமியாவில் பல வகைகள் செய்யலாம். அவற்றில் அன்னாசிப்பழ ஸ்வீட் சேமியா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையானவை:-

1 கப்- சேமியா 

1 கப் -அன்னாசி பழம் துண்டுகள்

1.5 கப் நெய்

5 டீஸ்பூன் சர்க்கரை -

5 டீஸ்பூன் கராமம் தூள்

1 கப் நட்ஸ் (முந்திரி, அக்ரூட் பருப்புகள், பிஸ்தா)

தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்

செய்முறை:-

ஒரு கடாயில் சிறிய நெய் ஊற்றி சூடான பின் வெட்டி வைத்துள்ள நட்ஸ்யை சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். பொன் நிறமாக மாறிய பிறகு நட்ஸ்யை ஒரு கப்பில் வைக்கவும். பிறகு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் அன்னாசி பழம் துண்டுகள் மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்ந்து 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும். பிறகு வதக்கிய அன்னாசி பழம் துண்டுகள் ஒரு கப்பிற்கு மாற்றவும். இப்போது கடாயில் சேமியாவை போட்டு அதில் 1.5 கப் தண்ணீரை சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு தேவையான உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் வைத்து பிறகு அன்னாசி பழம் துண்டு, வறுத்த நட்ஸ் மற்றும் காராமம் தூள் ஆகியவற்றை கலந்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். இப்போது சுவையான சூடான சேமியா தயார்.

வீடியோ

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close