கடந்த 20 ஆண்டில் பேரிடர்களால் இந்தியாக்கு $79.5 பில்லியன் இழப்பு: UN

கடந்த 20 ஆண்டுகளில் இயற்க்கை பேரிடருக்காக இந்தியா $79.5 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தகவல் தெரிவித்துள்ளது..! 

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Oct 11, 2018, 11:48 AM IST
கடந்த 20 ஆண்டில் பேரிடர்களால் இந்தியாக்கு $79.5 பில்லியன் இழப்பு: UN
Representational Image

கடந்த 20 ஆண்டுகளில் இயற்க்கை பேரிடருக்காக இந்தியா $79.5 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தகவல் தெரிவித்துள்ளது..! 

இயற்கைப் பேரிடர்களால், கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான சுமார் 20 ஆண்டுகளில் இந்தியா சுமார் 79.5 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாக ஐ.நா-வின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பருவ நிலை மாற்றங்கள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளது. சமீபத்தில், கேரளாவில் வரலாறு காணாத கனமழையால் மாநிலம் முழுவதும் பாதித்தது. அண்டை மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவியால், கேரள மாநிலம் தனது இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறது. ஏராளமான மக்கள் தங்களது உறவுகளை, உடைமைகளை இழந்து தவித்துவருகின்றன. 

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இயற்கைப் பேரிடர்களால் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இந்தியா சுமார் 79.5 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 1998 - 2017 வரை இந்தியா சந்தித்துள்ள பேரிடர்களால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், பேரிடர்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருளாதார இழப்பும் அதிகம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர்களால் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4-வது ஆக உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில், உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றத்தால் ஏற்பட்ட பேரிடர்களில் சுமார் 1.3 மில்லியன் மக்கள் பலியாகினர். மேலும் 4.4 பில்லியன் மக்கள்  காயங்ளாலும், வீடுகளை இழந்துள்ளனர். 100 கோடி மதிப்பிலான சொத்துகள் அழிந்துபோகின்றன. கடந்த 20 ஆண்டுகளில், உலக அளவில் பேரிடரால் ஏற்பட்டுள்ள இழப்பு, சுமார் 3 ட்ரில்லியன் ஆகும்.

தேசிய பேரிடர்களால் அதிக இழப்புக்களை சந்தித்த முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் (945 பில்லியன் டாலர்), சீனா 2 வது இடத்திலும் (492 பில்லியன் டாலர்), ஜப்பான் 3 ஆவது இடத்திலும் (376 பில்லியன் டாலர்) உள்ளன. ஐ.நா-வின் தேசிய பேரிடர் அபாய குறைப்பு கழகம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

1978 - 1997 காலகட்டங்களில் பேரிடரால் ஏற்பட்ட இழப்பை விட, கடந்த 20 ஆண்டுகளில் அதிக இழப்பை உலக நாடுகள் சந்தித்துள்ளன. பூகம்பங்கள் மற்றும் சுனாமியால் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம், புயல் மற்றும் வறட்சியால் பொருளாதார இழப்பு மற்றும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close