ரூ.1212-க்கு விமான சேவை; IndiGo அதிரடி சலுகை!

பட்ஜட் விமான சேவை நிறுவனமான இண்டிகோ, பயணிகளுக்கு அதிரடி சலுகையினை அறிவித்துள்ளது!

Updated: Jul 10, 2018, 05:11 PM IST
ரூ.1212-க்கு விமான சேவை; IndiGo அதிரடி சலுகை!
Representational Image

பட்ஜட் விமான சேவை நிறுவனமான இண்டிகோ, பயணிகளுக்கு அதிரடி சலுகையினை அறிவித்துள்ளது!

மளிவு விலையில் விமான சேவையினை வழங்கி வரும் பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ சுமார் 12 லட்சம் விமான சீட்டுகளை மளிவு விலையில் விற்க திட்டமிட்டுள்ளது. இந்த சலுகையானது வரும் ஜூலை 25, 2018 முதல் மார்ச் 30, 2019 இடைப்பட்ட காலத்தில் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் பயணிகளுக்கு பொருந்தும் எனவும், இதற்கான பயணச் சீட்டுகளை இன்று துவங்கி வரும் வெள்ளி வரை உட்பட்ட காலத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த சலுகையின் மூலம் பயணிகள் ரூ.1212 முதல் சீட்டுகளை பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவன தலைமை மூலோபாயம் அதிகாரி வில்லியம் பௌல்டர் தெரிவிக்கையில்... "வரும் ஆகஸ்ட் மாதம் 04-ஆம் நாள் IndiGo நிறுவனம் தனது 12-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது., இந்த தருனத்தை கொண்டாடும் வகையில் சுமார் 12 லட்சம் பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு மளிவு விலையில் விற்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சலுகை விற்பனையானது ஜூலை 10 - ஜூலை 13, 2018 வரை நடைப்பெறும். கிட்டத்தட்ட 57 நகரங்களுக்கான விமான சேவைகளில் இந்த சலுகை விற்பனை உட்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே வேலையில் SBI வங்கி பரிவர்தனை அட்டை மூலம் பணம் செலுத்துவோருக்கு 5% வரை பணம் திருப்பியளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி பயணிகள் ரூ.500-லிருந்து ரூ.3000 வரை பணம் திரும்பிப்பெறலாம் என தெரிகிறது. திருப்பி அளிக்கப்படும் பணங்கள் செப்டம்பர் 14, 2018 ஆம் நாளிற்குள் பயணிகளின் கணக்கின் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, தேசியளவில் 42 உள்ளூர் மற்றம் 8 சர்வதே விமான நிலையங்களை இணைக்கும் விதமாக 1086 விமானங்களை இயக்கி வருகின்றது.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close