Jane Walker - பெண்களுக்காக தயாராகி வரும் சிறப்பு மதுபானம்!

உலகின் மிகவும் பிரபலமான ஸ்காட்ச் விஸ்கி பிராண்ட்களில் ஒன்று ஜானி வால்கர், தற்போது பாலின சமத்துவத்திற்கு ஆதரவாக ஜேன் வால்கர் என்னும் பெண்களுக்கான பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Updated: Feb 27, 2018, 07:47 PM IST
Jane Walker - பெண்களுக்காக தயாராகி வரும் சிறப்பு மதுபானம்!
Representational image

உலகின் மிகவும் பிரபலமான ஸ்காட்ச் விஸ்கி பிராண்ட்களில் ஒன்று ஜானி வால்கர், தற்போது பாலின சமத்துவத்திற்கு ஆதரவாக ஜேன் வால்கர் என்னும் பெண்களுக்கான பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 

குறைந்த அளவிலான தயாரிபில் வெளியாகவுள்ள ஜேன் வால்கர், பெண்களின் மனதை கொள்ளை கொள்ளும் எனவும், மேலும் பெண்களுக்கான பானங்களை தனித்துவமாக தயாரிக்க முன்வரவுள்ளதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜானி வால்கர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த பதிவில் ஜேன் வால்கரின் லோகோ-வினையும் பதிவிட்டுள்ளது. இந்த லோகோவில் ஓர் பெண் நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஜானி வால்கர் பாட்டில்களில் ஓர் ஆண் நடந்துச் செல்வது போல் லோகே அமைக்கப்பட்டிருப்பது வழக்கம்.

இந்த பானங்கள் அடுத்த மாதம் முதல் அமெரிக்காவில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close