கருணாநிதி மறைவு! உருக்கமான கவிதை வெளியிட்ட விஜயகாந்த்!

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருணாநிதிக்கு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

Zee News Tamil (Web Team) Zee செய்திகள்(இணைய பிரிவு) | Updated: Aug 9, 2018, 11:14 AM IST
கருணாநிதி மறைவு! உருக்கமான கவிதை வெளியிட்ட விஜயகாந்த்!

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருணாநிதிக்கு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார். 

இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவருக்காக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

 

 

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close