Kiki Challenge-க்கு போட்டியாக களமிறங்கியது Fallen Challenge!

Kiki Challenge-ன் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் Fallen Challenge என்னும் புதிய சவால் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த சவாலும் Kiki Challenge-னை போல் மக்களை துயரத்தில் ஆழ்த்த மறக்கவில்லை!

Written by - Mukesh M | Last Updated : Oct 21, 2018, 07:40 PM IST
Kiki Challenge-க்கு போட்டியாக களமிறங்கியது Fallen Challenge! title=

Kiki Challenge-ன் தாக்கம் தற்போது குறைந்துள்ள நிலையில் Fallen Challenge என்னும் புதிய சவால் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த சவாலும் Kiki Challenge-னை போல் மக்களை துயரத்தில் ஆழ்த்த மறக்கவில்லை!

கையில், பையில் இருக்கும் பொருட்கள் தரையில் சிதறி கிடக்க, தானும் தரையில் விழ வேண்டும் என்பதே Fallen Challenge ஆகும். இந்த சவாலினை பலர் வித்தியாசமாக முயற்சித்து படுகாயங்களுடன் திரும்பியுள்ளனர். குறிப்பாக நகரும் படிகேட்டுகளான எலிவேட்டர்களில் தலை குப்புற விழுந்து இருப்பது போன்று சிலர் இந்த சவாலிற்காக புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த விபரீத முயற்சி அவர்களை ஆபத்தில் கொண்டு சேர்த்துள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

getting the shot be like.......Jepret, Jepret   #fallingstarschallenge #fallingstars2018 #fallingstarsjedar

A post shared by R I C H A R D K Y L E (@richo_kyle) on

கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இந்த Fallen Challenge ஆனது ரஷ்யா நாட்டில் இருந்து தோன்றியதாக தெரிகிறது. 

ஓடும் வாகனத்திற்கு ஈடாக நடனம் ஆடும் Kiki Challenge மூலம் பலர் பாதிப்படைந்தனர். இதையடுத்து இந்தியாவின் பல மாநில காவல்துறையினர் இந்த சவாலை மேற்கொள்வோருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். காவல்துறையின் எச்சரிக்கைகளுக்கு பிறகு இந்தியாவில் இந்த சவாலின் தாக்கம் குறைந்த போதிலும், மேலை நாடுகளில் குறைந்தபாடில்லை., 

இந்நிலையில் தற்போது Kiki Challenge தலைதூக்க துவங்கியுள்ளது. இந்த சவாலினை தாங்கள் செய்வது மட்டும் அல்லாமல் சிலர் தங்களது செல்ல பிராணிகளையும் மேற்கொள்ள வைத்து வருகின்றனர்...

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Judulnya nyungsep,jungkel pas bawa . #fallingstarschallenge #fallingstars2018 #fallingstars #starchallenge

A post shared by Shanty Echa (@shanty_echa) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 ngstars #falling #Star #fallingstars 

A post shared by Kristian Rus W tian_rus_wolf) on

Trending News