சச்சின் மகள் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கியவன் கைது!

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரது மகளின் போலி டிவிட்டர் கணக்கு செயல்பட்டு வருவதாக சச்சின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

Updated: Feb 8, 2018, 12:47 PM IST
சச்சின் மகள் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கியவன் கைது!

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரது மகளின் போலி டிவிட்டர் கணக்கு செயல்பட்டு வருவதாக சச்சின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் மும்பையைச் சேர்ந்த ஒருவன் (நிதின் ஷிஷ்கோட்) சாராவின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டதுடன் அந்த கணக்கில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷர்த் பவார் குறித்து தவறான கருத்துகளை பதிவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், மும்பை அந்தேரியில் தங்கியிருந்த நிதினை மும்பை சைபர்கிரைம் போலீசார் கைது செய்ததுடன் அவரிடமிருந்து லேப்டாப், செல்போன் என பல எலக்ட்ரானிக் பொருட்களை கைப்பற்றினர். அவர் மீது ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல் மற்றும் அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.