இனி வங்கிக் கடன் பெற ஆதார், ரேஷன் கார்டுடன் நிர்வாண செல்ஃபி தேவை!

இனி வங்கிக்கடன் பெறுவதற்கு ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை தொடர்ந்து நிர்வாண புகைப்படமும் தேவை......!   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2018, 04:12 PM IST
இனி வங்கிக் கடன் பெற ஆதார், ரேஷன் கார்டுடன் நிர்வாண செல்ஃபி தேவை!  title=

இனி வங்கிக்கடன் கடன் பெறுவதற்கு ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை தொடர்ந்து நிர்வாண புகைப்படமும் தேவை......!   

இந்தியாவில் நாம் கடன் வீங்க வேண்டும் என்றார் குறைந்தது ஒரு மூன்று மாதங்களாவது வங்கிக்கும் வீட்டிற்கு அலைவது வழக்கம். அதும் வயதானவர்களாக இருந்தால் நினைத்து கூட பார்க்க முடியாத நிலைக்கு தள்ளபடுவார்கள். இந்தியாவை பொறுத்தவரையில், வீட்டு கடன், வங்கிக்கடன், கார் கடன், விவசாய கடன், நகைக்கடன் என ஐந்து வகையான கடன்களை பெறலாம். 

ஆனால், சீனாவில் இந்த கடன்களுடன் சேர்த்து இளம் பெண்களுக்கு என ‘நிர்வாண கடன் சேவை’-யையும் வழங்கி வருகிறது. அதென்ன புதிய வகை கடன் என்று நினைக்கிறீர்களா?. ஆமாம், மக்களே..... இளம்பெண்கள் நிர்வாணமாக செல்பி எடுத்து அனுப்பினால் லோன்  என்ற சேவையை சீன இ-காமர்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கியுள்ளது. 

உலகின் அதிகமான மக்களை தொகையை கொண்டுள்ள நாடு சீனா. இந்நிலையில், நடுத்தர வாழ்க்கையை வாழும் இளம்பெண்களுக்கு வசதியான வாழ்கை வாழ ஆசைகாட்டும் வகையில், இந்த வகை கடன் சேவையை இ-காமர்ஸ் நிறுவனங்கள் முறைகேடாக துவங்கியுள்ளது.

இவர்களின் டார்கெட் முழுக்க முழுக்க இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து தாக்கி வருகின்றனர். இவர்களுக்கு கடன் சேவை வழங்க செய்ய வேண்டிய தெல்லாம் நிவாணமாக புகைப்படம் எடுத்து அனுப்பவேண்டும் என்பதுதான். அதுவும், வெறுமையே நிர்வாண புகைப்படம் இல்லை. அவர்களது அடையாள அட்டையுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். அப்படி செய்தால் எந்த கேள்விகளும் இல்லாமல் இளம் பெண்களுக்கு உடனடியாக கடன் வழங்குகிறது இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள்.

அதற்காக நிர்வாணமாக செல்பி எடுத்து அனுப்புவதால் பணம் கடனாக இல்லாமல் இலவசமாக கொடுக்கின்றனர் என்று பொருள் இல்லை. அவர்களுக்கு பணம் கடனாகத்தான் வழங்கபடுகிறது. வட்டியுடன் குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்கள் பணத்தை செலுத்தவில்லை என்றால்தான் சிக்கல் இருக்கிறது. அந்த நிர்வாண புகைப்படங்கள் கடன் வாங்கிவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனுப்பிவிடுவதாக அந்நிறுவனம் மிரட்டி வந்துள்ளது. 

சிலரிடம் காசு வசூலிக்கவே முடியாது என்று தெரிந்துவிட்டால் அந்த பெண்களிடம் நிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கேட்டும் இல்லது உடலுறவுக்கு வற்புறுத்தியும் தொந்தரவு செய்கின்றனர். கடந்த, 2016 ஆம் ஆண்டு சுமார் 10 GB அளவுக்கு 161 இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்கள், அவர்களின் புகைப்பட அடையாள அட்டையுடன் இ-காமர்ஸ் நிறுவனங்களால் இணையத்தில் வெளியிடபட்டுல்லதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் வெளியானதை தொடர்ந்து, முறையான அனுமதி இல்லாமல் தொடங்கப்படும் நிறுவனங்கள் கடன் வழங்குவதை அரசு தடை செய்துள்ளது. எனினும், அரசின் கவனத்திற்கு வராதபடி இந்த செயல்கள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் தங்களது தனிப்பட்ட புகைப்படங்கள் போனாலும் பரவாயில்லை, பணம் வேண்டும் என்று பல இளம்பெண்கள் இத்தகைய நிறுவனங்களை அணுகுவது பெரும் அதிர்ச்சியை தருகிறது.

 

Trending News