ஆணுறை-க்கு டாட்டா; வருகிறது குடும்ப கட்டுப்பாடு Gel!

தேசிய மருத்துவ நிறுவனத்தின் நிதியுதவி பெரும் மருத்துவ சோதனை குழு ஒன்று ஆண்களுக்கான கருத்தடை ஜெல் உருவாக்கும் சோதனையில் ஈடுப்பட்டுள்ளது!

Updated: Dec 5, 2018, 08:24 PM IST
ஆணுறை-க்கு டாட்டா; வருகிறது குடும்ப கட்டுப்பாடு Gel!
Representational Image

தேசிய மருத்துவ நிறுவனத்தின் நிதியுதவி பெரும் மருத்துவ சோதனை குழு ஒன்று ஆண்களுக்கான கருத்தடை ஜெல் உருவாக்கும் சோதனையில் ஈடுப்பட்டுள்ளது!

காலத்திற்கேற்ப கண்டுபிடிப்புகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆணுறை, கருதடை மாத்திரை போன்றவற்றிற்கு மாற்று பொருளாய் ஜெல் என்னும் கூழ்மத்தினை கண்டறியும் பணியில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று ஈடுப்பட்டு வருகின்றது. 

மக்கள்தொகை கவுன்சில் மற்றும் NIH-ன் யூனிஸ் கென்னடி ஷிவர்வர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சல்ட் ஹெல்த் அண்ட் ஹ்யூமன் டெவலப்மென்ட் (NICHD)-ன் கூட்டு முயற்சியில் இந்த ஜெல் உருவாக்கப்பட்டுள்ளது.

நடைமுறையில் பல பெண்கள் ஹார்மோன் கருத்தடை பொருட்களை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அதே வேலையில் ஆண்களுக்கான கருத்தடை பெருட்களும் சந்தையில் குறைந்தளவிலேயே உள்ளன. இந்த தட்டுப்பாட்டினை போக்க இந்த புதிய கண்டுபிடிப்பு உதவும் என ஆய்வு புலனையாளர் மற்றும் NICHD-ன் கருத்தடை அபிவிருத்தி திட்டத்தின் தலைவர்  Diana Blithe, Ph.D., தெரிவித்துள்ளார். மிகவும் பாதுகாப்பான, பயனுள்ள இந்த தலைகீழ் முறை கருதடை உலகில் ஒரு முக்கியமான இடத்தினை பெறும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

NES/T என்று அழைக்கப்படும் இந்த ஜெல் ஆனது., பயன்பாட்டின் போது இரத்த அளவு சார்ந்து இருக்கும் மற்ற செயல்பாடுகளை பராமரிக்கிறது எனவும், பொது சுகாதாரத் தேவையை பூர்த்தி செய்யும் காரணியாகவும் அமையும் என NIH குறிப்பிட்டுள்ளது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள கருத்தடை ஜெல்லினை பரிசோதனை செய்ய ஆய்வாளர்கள் சுமார் 420 ஜோடிகளை ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வில் பங்கேற்கும் ஆண்பள் NES / T ஜெல்லினை தினசரி பயன்படுத்தி பலனை தெரிவிப்பர் எனவும். இந்த செய்முறையானது நான்கு முதல் 12 வாரங்களுக்கு பினதொடர்வர் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பயனாலர்களின் கருத்துகளின் அடிப்படையிலும், ஏற்படும் பின்விளைவுகளையும் கருத்தில் கொண்டே இந்த ஜெல் ஆனது பயன்பாட்டிற்கு தகுந்ததா இல்லையே என உறுதிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

NICHD-ன் இந்த கருத்தடை மருத்துவ சோதனை இரண்டு தளங்களின் உதவியுடன் நடத்தப்படவுள்ளது. 

  • லாஸ் ஏஞ்சல்ஸ் பயோமெடிடிகல் இன்ஸ்டிடியூட் அண்ட் கலிபோர்னியா பல்கலைக்கழகம் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவ மையம் (கிறிஸ்டினா வாங், எம்.டி., முதன்மை ஆராய்ச்சியாளர்)
  • வாஷிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டில் (ஸ்டீபனி பேஜ், எம்.டி., பிஎச்.டி, முதன்மை ஆராய்ச்சியாளர்)

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close