மைசூர் ராயல்ஸ் குடும்பத்திற்குள் புதுவரவு!

இக்குழந்தை மைசூர் ராஜ்யத்தில் நீண்ட நாளாக இருந்து வந்த வாரிசு பிரச்சனையை தீர்த்துள்ளது!

Updated: Dec 7, 2017, 05:50 PM IST
மைசூர் ராயல்ஸ் குடும்பத்திற்குள் புதுவரவு!
Yaduveer Krishnadatta Chamaraja Wadiyar and Trishika Kumari Devi were married in 2016. Photograph: (Twitter)

மைசூர் ராயல்ஸ் யாதுவீர் கிருஷ்ணதாத்தா சாமரஜா வித்தியார் மற்றும் அவரது மனைவி திரிச்சிகா குமாரி தேவி ஆகியோர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. நகரின் தெற்கு பகுதியில் தனியார் மருத்துவமனையில் இக்குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதம் நடைப்பெற்ற தசரா சடங்குகளில் ராணி திரிச்சிகா குமாரி தேவி பங்கேற்றார். கடந்த 56 ஆண்டு தசரா சடங்குகளில் கர்ப்பிணி ராணி பங்கேற்றது இதுதான் முதல் முறை என அனைத்து ஊடகங்களும் பிரசூரித்தது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டில் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜரின் மனைவி பிரமோடா தேவியால் யாத்வீர் சட்டப்படி தத்துக்குழந்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். 

மைசூரின் 27-வது அரசராகவும், அதே வருடத்தில் வதீயர் வம்ச தலைமையின் தலைவரின் தலைவராகவும் அவர் பொருப்பேற்றுக் கொண்டார்.

யாதுவீர் கிருஷ்ணதாத்தா சாமரஜா வித்தியார் மற்றும் அவரது மனைவி திரிச்சிகா குமாரி தேவி ஆகியோருக்கு கடந்த ஜூன் 2016-ஆம் ஆண்டு திருமணம் நிகழ்ந்தது. 

இந்நிலையில் தற்போது இத்தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை மைசூர் ராஜ்யத்தில் நீண்ட நாளாக இருந்து வந்த வாரிசு பிரச்சனையை தீர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close