இந்த ஆண்டின் மூன்றாவது சூரிய கிரகணம் நடந்து முடிந்தது!

இன்று ஆகஸ்ட் மாதம் 11 ஆ தேதி பகுதிநேர சூரிய கிரகணம் நிகழும். சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 11, 2018, 07:32 PM IST
இந்த ஆண்டின் மூன்றாவது சூரிய கிரகணம் நடந்து முடிந்தது!  title=

இந்த வருடத்தின் மூன்றாவது கிரகணம் நிகழ்வு இன்று நடக்க உள்ளது. இந்த வருடத்தின் கடந்த மாதம் (ஜூலை) 17 ஆம் தேதி நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் ஏற்பட்டது. பின்னர் பகுதி நேர சூரியகிரகணம் நிகழ்ந்தது. தற்போது இன்று மீண்டும் பகுதி நேர சூரியகிரகணம் நடக்க உள்ளது. இந்த கிரகணம் கிட்டத்தட்ட 3.30 மணி நேரம் நடைபெறும். 

நாசா விண்வெளி ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த கிரகணம் வடக்கு மற்றும் கிழக் ஐரோப்பா, வடஅமெரிக்காவின் வடகிழக்கு பகுதியிலும், ஆசியாவை பொருத்த வரை வடக்கு மற்றும் மேற்கு இருக்கும் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை பார்க்க இயலும் என தெரிவித்துள்ளது. இந்தியாவை பொருத்த வரை தெளிவாக காண இயலாது.

இந்திய நேரப்படி மதியம் 1.32 மணிக்கு தொடங்கும் பகுதி நேர சூரியகிரகண நிகழ்வு மதியம் 3.16 மணி வரை நீடிக்கும். பொதுவாக கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, வேலை செய்யக்கூடாது, வானத்தை பார்க்கப் கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறது. மேலும் வெற்றுக் கண்ணால் பார்க்கக் கூடாது.

Trending News