சீமராஜா படம் குறித்து சமந்தா புதிய தகவல்!

பிரபல நடிகை சமந்தா தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய்சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ் மற்றும் நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Updated: Mar 11, 2018, 11:30 AM IST
சீமராஜா படம் குறித்து சமந்தா புதிய தகவல்!

பிரபல நடிகை சமந்தா தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய்சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ் மற்றும் நடிகையர் திலகம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணியில் சீமராஜா என்ற படம் தயாராகி வருகிறது. இப்படம் மூலம் சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை சமந்தா.

டி.இமான் இசையமைப்பில் 24 AM ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நடிகை சமந்தா தன்னுடைய டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சமந்தா நடிப்பில் தற்போது ‘இரும்புத்திரை’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. அத்துடன், ‘சீம ராஜா’, ‘நடிகையர் திலகம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘யு டர்ன் ரீமேக்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா.