முந்துங்கள்: திருச்சி BHEL நிறுவனத்தில் 918 பணியிடங்கள்!

திருச்சி பெல் நிறுவனத்தில் 918 பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது!

Updated: Mar 13, 2018, 01:36 PM IST
முந்துங்கள்: திருச்சி BHEL நிறுவனத்தில் 918 பணியிடங்கள்!

திருச்சி பெல் நிறுவனத்தில் 918 பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது!

Bharat Heavy Electricals Ltd.(BHEL) எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தின் திருச்சி கிளையில் "ட்ரேடு அப்ரண்டிஸ் 2018" பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

பிரிவு வாரியாக பிட்டர் - 330, வெல்டர் - 240, டர்னர் - 25, மெஷினிஸ்ட் - 35, எலக்ட்ரிசியன் - 75, வயர்மேன் - 20, எலக்ட்ரானிக் மெக்கானிக் - 15, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், ஏ.சி. பிரிஜ், டீசல் மெக்கானிக், டிராட்ஸ்மேன், சீட் மெட்டல் ஒர்க்கர், சிஸ்டம் அட்மின் அசிஸ்டன்ட், ஹீட் டிரீட்டர், கார்பெண்டர், பிளம்பர், எம்.எல்.டி. பேதாலஜி எனும் பிரிவுகளின் கீழ் சுமார் 918 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இதற்கான அதிகாரபூர்வு அறிவிப்பினை BHEL https://www.bheltry.co.in/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது... 

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்...

  • விண்ணப்பதாரர் 1-4-2018 ஆம் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், இருத்தல் வேண்டும்.
  • 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள், 10,12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் N.C.T.V.T. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
  • விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 

விண்ணப்பிபதற்கான கடைசி நாள் வரும் 20-3-2018 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது