உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தில் இந்த இடம் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 1,829 மீட்டர் உயரத்தில் இருக்கும் இங்கு பழமைவாய்ந்த கோவில்கள், அடர்ந்த காடுகள், மலைகள், காலனிய கட்டடங்கள் இங்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.
கர்நாடகாவில் உள்ள இந்த மலை தொடர், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,851 அடி உயரத்தில் இருக்கிறது. பழமைவாய்ந்த கட்டடங்கள், அரண்மனைகள் இங்கு இருக்கின்றன.
கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளங்களில் தேக்கடி முக்கியமான ஒன்றாகும். நீங்கள் நகர வாழ்வை மறந்து இங்கு நிம்மதியாக இளைப்பாறலாம்.
மகாராஷ்டிராவில் உள்ள கடற்கரை சார்ந்த சுற்றுலா தளமான அலிபாக் கோன்கன் பகுதியில் முக்கியமான இடமாகும். அரேபிக்கடலின் அழகையும், பாரம்பரிய கோட்டைகள் உள்ளிட்டவற்றையும் ரசிப்பதற்கு ஏதுவான இடமாகும்.
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் இருந்து 2 மணிநேர பயணத்தில் பூரிக்குச் சென்றுவிடலாம். வங்காள விரிகுடாவின் கடற்கரை நகரமான பூரி பழமையான கோவில்களுக்கு பெயர்பெற்றது.
மகாராஷ்டிராவின் அழகிய நகரங்களில் ஒன்று. இதன் சுற்றுவட்டாரத்தில் பல இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளங்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள், பழமையான குகைகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் ஆகியவை இங்கு நிரம்பியுள்ளன.
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 7,200 அடி உயரத்தில் இருக்கும் இந்த நகரத்தில் பெரிய பெரிய மரங்கள், ஏரிகள், அருவிகள் ஆகிய இடங்களுக்கு சென்று நீங்கள் கொண்டாடலாம்.