இவர்தானா வர்மா படத்தில் துருவ்-ன் நாயகி!

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".

Updated: Mar 12, 2018, 12:10 PM IST
இவர்தானா வர்மா படத்தில் துருவ்-ன் நாயகி!

டோலிவுட்டில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவகொண்டா, மற்றும் ஷாலினி பாண்டே நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி".

இந்த படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு `வர்மா' என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. 

பாலா இயக்கும் இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதியிருக்கிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் நாயகியாக நடிகை கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்க இருப்பதாக நிறைய செய்திகள் வருகின்றன. இந்த தகவல் உண்மையா என்று தற்போது உறுதி படுத்தப்படவில்லை.