இனி திரைப்படங்களில் நடிக்கும் இல்லை: கமல்ஹாசன்!!

இனி திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்கபோவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

Updated: Feb 14, 2018, 10:59 AM IST
இனி திரைப்படங்களில் நடிக்கும் இல்லை: கமல்ஹாசன்!!
ZeeNewsTamil

நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து நடிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் கொள்கைகள் குறித்து இம்மாதம் அறிவிக்க உள்ள நிலையில், கமல்ஹாசனின் முடிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்காக எடுக்கப்பட்ட பேட்டியில், வெளிவர இருக்கும் இரு படங்களைத் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும், தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

வரும் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை கமல் தொடங்க உள்ளார். 

தொடர்ந்து அதே நாளில் மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்சிப் பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்கவுள்ளார்.