நடிகை டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரியின் சகோதரன் மகள் மாயம்!

Last Updated: Tuesday, September 12, 2017 - 13:27
நடிகை டிஸ்கோ சாந்தி, லலிதாகுமாரியின் சகோதரன் மகள் மாயம்!

சென்னையில் உள்ள தியாகராய நகரில் வசித்து வரும், நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரியின் சகோதரனின் மூத்த மகள் அப்ரீனா (17) (+2 வகுப்பு ) கடந்த 6-ம் தேதி முதல் காணாமல் போனார். இவர் 5 நாட்கள் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீஸ் தீவிர விசாரணை செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

காவல் துறைக்கும் போதிய ஆதாரங்கள் பள்ளி அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை. பள்ளி மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது. ஊடகங்கள் மூலம் என் அண்ணன் மகள் அப்ரினா கிடைப்பால் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நடிகை லலிதா குமாரி கூறியுள்ளார்.