ஹேக் செய்யப்பட்ட நடிகை காயத்திரியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்

தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை காயத்திரி தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 20, 2022, 04:11 PM IST
  • நடிகை காயத்திரியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக்
  • மெசேஜூகள் வந்தால் பதிலளிக்க வேண்டாம் என டிவிட்டரில் காயத்திரி பதிவு
  • தனக்கு மெசேஜ் வந்ததாக பிரேம்ஜி அமரன் ரிப்ளை
ஹேக் செய்யப்பட்ட நடிகை காயத்திரியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் title=

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை காயத்திரி. பல்வேறு படங்களில் அடித்தடுத்து நடித்த அவர், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ’மாமனிதன். படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், நடிகை காயத்திரியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சூப்பர் ஸ்டாரை அடுத்தடுத்து இயக்கும் சிவகார்த்திகேயன் நண்பர்கள்

இதனை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை காயத்திரி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மெசேஜ் வந்தால் அதனை யாரும் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். முடக்கப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்டெடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதுவரை அந்த அக்கவுண்டில் இருந்து வரும் மெசேஜ்ஜூகளை புறக்கணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகை காயத்திரியின் இந்தப் பதிவுக்கு ரிப்ளை கொடுத்துள்ள வெங்கட்பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி, காயத்திரியின் அக்கவுண்டில் இருந்து தனக்கு மெசேஜ் வந்ததாக கூறினார். அந்த மெஜேசில் ஏதேனும் லிங்க் இருந்தா? நீங்கள் அதனை கிளிக் செய்தீர்களா? என நடிகை காயத்திரி வினவினார். அதற்கு பதில் அளித்த பிரேம்ஜி, மெசேஜூக்கு பதிலளிக்கவில்லை எனக் கூறினார்.

இதேபோல் நடிகை நஸ்ரியா, அம்ரிதா ஐயர், பூஜாஹெக்டே உள்ளிட்ட பல நடிகைகளின் அக்கவுண்டுகளும் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | கடவுள் எதிர்ப்பா பெரியார் கொள்கை? வைரலாகும் ஜீ தமிழ் நிகழ்ச்சி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News