தனது முதல் படத்திலேயே சொந்த குரலில் பாடிய நாயகி!

பிரபுதேவா, பிரபு நடித்து வரும் திரைப்படம் ‘சார்லி சாப்ளின் 2’. சக்தி சிதம்பரம் இயக்கி வரும் இந்த படத்தில் ஆதவ் சர்மா தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார்.

Updated: Mar 13, 2018, 09:05 AM IST
தனது முதல் படத்திலேயே சொந்த குரலில் பாடிய நாயகி!
ZeeNewsTamil

கடந்த 2002-ஆம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘சார்லி சாப்ளின்’. தற்போது இப்படத்தின் இரண்டாம் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. சார்லி சாப்ளின் இரண்டாம் பாகத்தில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, அடா சர்மா என பலர் நடிக்கின்றனர். 

முதல் பாகத்தை இயக்கிய சக்தி சிதம்பரம் இந்த பாகத்தையும் இயக்குகிறார். அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை செளந்தர்ராஜன் மேற்கொள்கிறார். பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகன் இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ், ஆதவ் சர்மாவை ஒரு பாடலை பாட வைத்துள்ளார். தமிழை தாய்மொழியாக கொண்ட நடிகை என்பதால் மிக எளிதாக அந்த பாடலை அவர் பாடி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

நடிகை சொந்தக்குரலில் டப்பிங் பேசுவதே மிக அபூர்வம். இந்த நிலையில் முதல் படத்திலேயே சொந்தக்குரலில் டப்பிங் பேசுவது மட்டுமின்றி ஒரு பாடலையும் பாடிய ஆதவ் சர்மாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

இதையடுத்து, படத்தை இந்தாண்டு மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ ரிலீஸ் திட்டம் குறித்து குறித்த ட்விட்டரில் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.