வெளியானது 'அதோ அந்த பறவை போல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

அமலாபால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார்.

Updated: Mar 9, 2018, 10:05 AM IST
வெளியானது 'அதோ அந்த பறவை போல' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ZeeNews

நடிகை அமலாபால் தனது விவாகரத்துக்குப் பிறகு வீறு கொண்டு எழுந்து நிற்கும் அமலா பால், சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பதற்காக நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது, 'அதோ அந்தப் பறவை போல' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் இடம்பெற்ற உணர்சிகரமான பாடலாக அமைந்த 'அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்' பாடலின்  முதல் வரியை தலைப்பாக கொண்ட இந்தப் படத்தில் கதாநாயகியை முதன்மைப் படுத்தும் கதாபாத்திரம் ஏற்றுள்ளார் அமலாபால்.    

நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் 'அதோ அந்த பறவை போல' படத்தின் முதல் பார்வை போஸ்டரை, அமலா பாலின் நெருங்கிய தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். 

தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்ட காஜல் அகர்வால்,"பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால்" என்று குறிப்பிட்ட தன் நட்பையும், அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.