KBC 13: பெண் போட்டியாளருடன் நேரம் செலவழிக்க Break கேட்கும் அமிதாப்பச்சன்

போட்டியாளருடன் நேரம் செலவழிக்க வேண்டும், சற்று நேரம் ‘நிகழ்ச்சியை நிறுத்துங்கள்’என்று கேட்டுக் கொண்ட கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமிதாப்பச்சன்  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2021, 09:51 AM IST
  • நிகழ்ச்சியை நிறுத்துங்கள் என கேட்டுக்கொண்ட நடிகர்
  • கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமிதாப்பச்சனின் வேண்டுகோள்
  • என்னை அமித் என்றே அழைக்கலாம் என அமிதாப் சொவது ஏன்?
KBC 13: பெண் போட்டியாளருடன் நேரம் செலவழிக்க Break கேட்கும் அமிதாப்பச்சன்  title=

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைகாட்சி நிகழ்ச்சியின் இந்தி பதிப்பான கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சியின் 13வது சீசனுக்கான விளம்பரங்கள் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்று வருகிறது. 

கோன் பனேகா கோரோபதி 13 க்கான புதிய ப்ரோமோவில், போட்டியாளர்களில் ஒருவரான நம்ரதா ஷா என்ற கதக் ஆசிரியையுடன் சற்று நேரம் செலவழிக்க வேண்டும் எனவே, கொஞ்சம் ப்ரேக் கொடுங்கள் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நடிகர் அமிதாப்பச்சன், நிகழ்ச்சித் தயாரிப்பாளரை கேட்டுக் கொண்டார். இந்த செய்தியும், விளம்பரமும் இணையத்தில் வைரலாகிறது.

 
 
 
 

 
 

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)

இது தொடர்பான காட்சிகளை தனியார் தொலைகாட்சி விளம்பரமாக வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரமும் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி (Sony Entertainment Television) இன்ஸ்டாகிராமில் கோன் பனேகா குரோபதிபதி நிகழ்ச்சியின் 13இன் பதிப்புக்கான புதிய விளம்பரத்தை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவில், போட்டியாளர் நம்ரதா ஷாவுடன் ஒரு கப் தேநீர் அருந்த விரும்புவதால் நிகழ்ச்சியில் பிரேக் விடுமாறு தொகுப்பாளர் அமிதாப் பச்சன் தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டார்.  

நம்ராதாவிடம் பேசும் அமிதாப்பச்சன், அவர் அழகாக இருப்பதாகவும், அவர் அணிந்திருக்கும் நகை மிகவும் நன்றாக இருப்பதாகவும் சொல்வதோடு ப்ரோமோ தொடங்குகிறது. அமிதாப்பச்சனை 'அமித் ஜி' என்று அழைக்கலாமா என நம்ரதா கேட்க, 'அமித்' என்று அழைக்கலாம் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் பிக் பி அமிதாப் பச்சன். அதற்குபின் உடனே, "தயாரிப்பாளரே, தயவுசெய்து நிகழ்ச்சியை நிறுத்துங்கள், நான் நம்ரதாவுடன் ஒரு கப் தேநீர் அருந்த விரும்புகிறேன்" என்று கூறினார்.

மிகவும் பிரபலமான இந்தி திரைப்படப் பாடல் ஒன்றுக்கு போட்டியாளர் நம்ரதா நடனமாடுகிறார். அதன்பிறகு, அவருடன் பேசும் அமிதாப் பச்சன், “நடனமாடும்போது எவ்வளவு முறை சுழன்று ஆடுகிறீர்கள்! தலை சுற்றவில்லையா?” என்று கேட்க, அதற்கு வெட்கத்துடன் பதிலளிக்கும் கதக் நடனமணி நம்ரதா, "கவனம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தால், தலை ஒருபோதும் சுற்றாது" என்று பதிலளிக்கிறார்.

அதுமட்டுமல்ல, "நீங்கள் மிகவும் இளமையாக இருக்கிறீர்கள்" என்று நம்ரதா அமிதாப்பிடம் சொல்கிறார்.

சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி நம்ரதா மற்றும் இரண்டு போட்டியாளர்களைக் கொண்ட மற்றொரு கேபிசி 13 ப்ரோமோவையும் பகிர்ந்துக் கொண்டுள்ளது. அவர்களில் ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கான கேள்வியை எதிர்கொள்கிறார்.  

விளம்பரத்தில் காணப்பட்ட மற்றுமொரு போட்டியாளர் சத்தீஸ்கரைச் சேர்ந்த பங்கஜ் குமார் சிங். அவர் அரிய முதுகெலும்பு நோயான ஜூவனைல் அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸால் (Juvenile Ankylosing Spondylitis) அவதிப்படுகிறார், ஆனால் அவரது ஆக்கப்பூர்வமான எண்ணமும், நேர்மறையான போக்கும் அமிதாப்பச்சனை கவர்ந்தது. கேபிசி 13 தயாரிப்பாளர் சித்தார்த்தா பாசுவும், இந்த ப்ரோமோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

Also Read | ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன்: 119 ஆபாச வீடியோக்களை ரூ .9 கோடிக்கு விற்க திட்டமா? பகீர் தகவல்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News