ஷூட்டிங்கின் போது சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு உடல் நலக்குறைவு

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பு தளத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரபப்பு.

Updated: Mar 13, 2018, 01:37 PM IST
ஷூட்டிங்கின் போது சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு உடல் நலக்குறைவு
Zee Media

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனைக் குறித்து முக்கிய செய்தி வந்துள்ளது. அவர் தற்போது "தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்" என்ற படத்தில் நடத்து வருகிறார். இந்த படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கி வருகிறார். இப்படம் நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநில ஜோத்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் கலந்துக்கொண்டார். 

காலை 3 மணி வரை படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு திடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரபப்பு ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் மும்பையில் இருந்து அவரது டாக்டர்கள் ஜோத்பூர் விரைந்துள்ளனர்.

தனது உடல் நலத்தை குறித்து அமிதாப்பச்சன் கூறியது, நான் நன்றாக இருக்கிறேன். ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். அதனால் கவலைப்பட வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

amitabh bachchan

75 வயதான பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், இந்த வயதிலும் நள்ளிரவு வரை படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளவது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது என அவர் தங்கிருக்கும் ஹோட்டல் அதிகாரி தெரிவித்தார். 

விமான நிலையத்தில் மருத்துவர்கள் குழு :கிளிக்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close