‘2.0’ எமி ஜாக்சனின் பர்ஸ்ட் லுக் வெளியீடு: போட்டோ உள்ளே!!

Updated: Oct 12, 2017, 04:06 PM IST
‘2.0’ எமி ஜாக்சனின் பர்ஸ்ட் லுக் வெளியீடு: போட்டோ உள்ளே!!

ரஜினிகாந்த் நடித்து உள்ள 2.0 படம் தொடர்ந்து சமுக வலைதளங்களில் டிரண்டில் இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது அப்படத்தின் கதாநாயகியான எமி ஜாக்சன் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார். '2.0' படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்‌ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் உருவாகி வருகிறது. 

இந்நிலையில் கடந்த அக்டோபர் 7-ம் தேதி அன்று இப்படத்தின் 3டியில் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை விளக்கும் முன்னோட்டப் படம் யு ட்யூபில் வெளியிட்டதுடன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு மற்றும் படத்தில் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. 

இந்நிலையில் நேற்று இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பகத்தில் ‘2.0’ படத்தில் நடித்து இருக்கும் எமி ஜாக்சனின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு உள்ளார்.

 

 

2.0 படத்தின் சில முக்கிய அப்டேட்கள்:-

* 2018-ல் ஜனவரி 26-ம் தேதி - படம் வெளியீடு.

* தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

* அக்டோபரில் துபாயில் இசை வெளியீடு.

* நவம்பரில் ஹைதராபாத்தில் டீஸர் வெளியீடு.

* டிசம்பரில் சென்னையில் டிரைய்லர் வெளியீடு.