பாலிவுட்டின் முன்னணி நடிகை மாரடைப்பால் மரணம்!!

Updated: May 18, 2017, 11:29 AM IST
பாலிவுட்டின் முன்னணி நடிகை மாரடைப்பால் மரணம்!!
ஜீ நியூஸ் தமிழ்

மும்பையில் பிரபல இந்தி நடிகை ரீமா லகு(வயது59) மாரடைப்பால் மரணமடைந்தார். 

நேற்று நள்ளிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

மறைந்த ரீமா, மராத்தி நடிகர் விவேக் லஜூவை திருமணம் செய்திருந்தார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு மிருன்மாயி என்ற மகள் உள்ளார். 

இவர் பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். துது..மேமே சீரியல் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. மேலும் மைனே பியார் கியா', 'ஆஷ்கிக்கு', 'சாஜன்', 'ஹம் ஆப்கே ஹெயின் கான்', 'வாஸ்துவ்', 'குச் குச் ஹோத்தா ஹை' மற்றும் 'ஹம் சாத்-சாத் ஹைன்' ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ளார்.

இவரின் இழப்பு செய்தியை அறிந்த இந்தி திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.