சென்சார் போர்டு உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்!!

Last Updated: Saturday, August 12, 2017 - 09:39
சென்சார் போர்டு உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்!!
Zee Media

மத்திய சென்சார் போர்டு உறுப்பினராக தமிழக நடிகை கவுதமி நியமனம் என அறிவிப்பு.

மத்திய திரைப்பட தணிக்கை வாரிய தலைவர் பதவியில் இருந்து பஹ்லாஜ் நிஹலானி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2015-ம் ஆண்டு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இன்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பஹ்லாஜ் நிஹலானி பதிலாக பரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வந்துள்ளது.

இந்நிலையில் தணிக்கை வாரியத்திற்க்கான புதிய உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த நடிகை கவுதமியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 

comments powered by Disqus