கைபுள்ளைக்கு வந்த சோதனை - சினிமாவில் நடிக்க தடை?

'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படம் தொடர்பான சர்ச்சை காரணமாக காமெடி நடிகர் வடிவேலு சினிமாவில் நடிக்க தடை என செய்திகள் வந்துள்ளன.

Updated: Feb 8, 2018, 04:42 PM IST
கைபுள்ளைக்கு வந்த சோதனை - சினிமாவில் நடிக்க தடை?
Zee News Tamil

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்ற வந்த திரைப்படம் "இம்சை அரசன் 24ம் புலிகேசி" இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு நன்றாக நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவினர் மற்றும் காமெடி நடிகர் வடிவேலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின் "இம்சை அரசன் 24ம் புலிகேசி படப்பிடிப்பில் காமெடி நடிகர் வடிவேல் கலந்து கொள்ளவில்லை. 

அதிக செலவு செய்து பிரமாண்ட செட்டுக்கள் போட்ட படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருக்கு தினமும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். இதையடுத்து, விளக்கம் கேட்டு காமெடி நடிகர் வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனால் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் காமெடி நடிகர் வடிவேலு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் பொறுமை இழந்த படக்குழு, வடிவேலு மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. அதில், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை வடிவேலு சினிமாவில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2006-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தை அடுத்து, தற்போது அதன் தொடர்ச்சி தான் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.