சிவகார்த்திகேயனுக்கு சுயநலமாக வாழ்த்திய டிடி!!

Last Updated: Friday, February 17, 2017 - 14:37
சிவகார்த்திகேயனுக்கு சுயநலமாக வாழ்த்திய டிடி!!
Pic courtsey: @DhivyaDharshini

தொலைகாட்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி நீலகண்டன் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து பெரிய ஆளாகியிருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  

டிடி எனப்படும் திவ்யதர்ஷினிக்கும் இன்று தான் பிறந்தநாள். அவர் சிவகார்த்திகேயனுக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர்:-

உடன் பிறப்பே பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களால் என் பிறந்தநாள் பிரபலமாகி வருகிறது. அதனால் நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும் என சுயநலமாக வாழ்த்துகிறேன். அன்பாக இருப்பதற்கு நன்றி என தெரிவித்துள்ளார். 

 

 

comments powered by Disqus