சிம்புவின் பண மதிப்பிழப்பு பாடல்- வீடியோ

Updated: Nov 9, 2017, 10:40 AM IST
சிம்புவின் பண மதிப்பிழப்பு பாடல்- வீடியோ

நடிகர் சிம்பு பண மதிப்பிழப்பு திட்டம் அறிவித்து ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிப்பது என்ற நோக்கத்துடன், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையிலும், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 'தட்றோம் தூக்றோம்' என்ற படத்திற்காக அவர் பாடியிருக்கும் பண மதிப்பிழப்பு பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. கபிலன் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலுக்கு பாலமுரளி இசையமைத்துள்ளார். இந்த பாடலுக்கு #DemonetizationAnthem என பெயரிட்டிருக்கின்றனர்.

பாடல் வீடியோ பார்க்க:-