#Viswasam படத்தில் அஜீதுக்கு எத்தனை கெட்டப் தெரியுமா?

அஜித் தற்போது நடித்துவரும் திரைப்பபடம் விஸ்வாசம் என தகவல்கள் வெளியானதை அடுத்து இப்படத்தின் நடிகர் எத்தனை வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியானது. 

Updated: Apr 7, 2018, 09:22 AM IST
#Viswasam படத்தில் அஜீதுக்கு எத்தனை கெட்டப் தெரியுமா?
ZeeNewsTamil

நடிகர் அஜீத் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். தற்போது, விசுவாசம் படத்தில் நடித்துவரும் நடிகர்களின் பட்டியலானது தற்போது ஒவ்வொன்றாக வெளியானது. 

இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க டி.இமான் முதன் முறையாக அஜீத் படத்திற்கு இசையமைக்கிறார்.இதையடுத்து, நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படமானது வீரம் இரண்டாம் பாகத்தை போன்று இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்த படம் வடசென்னை கதையில் உருவாக இருப்பதாகவும் அஜீத் வடசென்னை தமிழ் பேசி நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.இதையடுத்து, அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.  அதை தொடர்ந்து, விஸ்வாசம் குடும்பத்தில் நகைச்சுவை நடிகர்களான தம்பி ராமையா மற்றும் ரோபோ சங்கர், யோகிப்பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.   

அதைத்தொடர்ந்து, இந்த படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் இளைஞராக நடிக்கிறாராம் நடிகர் அஜித். அந்த காட்சிகளை மும்பையில் அடுத்த மாதம் படப்பிடிப்பு செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பை 4 மாதத்திற்குள் முடித்துவிட்டு, தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு செய்துள்ளனராம்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close