விஜய்க்கு இமொஜி: மெர்சல் டீமின் அடுத்த வெளியீடு!

Last Updated : Aug 18, 2017, 02:20 PM IST
விஜய்க்கு இமொஜி: மெர்சல் டீமின் அடுத்த வெளியீடு! title=

தென்இந்திய நடிகர்களில் முதன்முதலாக விஜைய்க்கு இமொஜி வடிவமைக்கபட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இப்படத்தில் மேல் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவிவரும் நிலையில், இப்படத்தின் ஆளப்போறான் தமிழன், நீதானே ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலலையில் இன்று மதியம் 2 மணிக்கு அடுத்த ஆச்சரியம் ஒன்று ரசிகர்களுக்கு காதிருப்பதாக படக்குழு இன்று காலை அறிவித்தது.

 

 

அதன்படி தற்போது ட்விட்டர் இந்தியாவுடன் படக்குழு இணைந்து விஜய்க்கு இமொஜி-யை உருவாக்கியுள்ளது. தென்இந்திய நடிகர்களில் முதன்முதலாக விஜைய்க்கு வடிவமைக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News