#Happy Birthday GV Prakash: ட்விட்டில் குவியும் வாழ்த்து!

இன்று இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்க்கு பிறந்த நாள், ரசிகரகள் ட்விட்டில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்!

Updated: Jun 13, 2018, 01:49 PM IST
#Happy Birthday GV Prakash: ட்விட்டில் குவியும் வாழ்த்து!
இன்று இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ்க்கு பிறந்த நாள், ரசிகரகள் ட்விட்டில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்!
ஜி. வி. பிரகாஷ் தமிழில் வெயில் என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகி இசையமைத்ததின் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். குறுகிய காலத்தில் 50 திற்கு அதிகமான படங்களுக்கு இசை அமைத்து திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் இசையமைப்பாளராக மட்டுமின்று, நான் ராஜாவாகப் போகிறேன், டார்லிங், பென்சில், திரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய திரைப்படங்களிலும் காதநாயகனாக நடித்து ஹிட் கொடுத்துள்ளார். 
 
இந்நிலையில், இவர் தற்போது ஆல்பம், வெயில், காவியத் தலைவன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள, இயக்குனர் வசந்தபாலனுடன் கைகோர்த்து இசையமைக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஒரு தனியார் சேனல் நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட அபர்னதி நடிக்கவுள்ளார். இப்படத்தில் படபிடிப்பு கடந்த மே-25 அன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.