விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

Last Updated : Sep 6, 2017, 10:39 AM IST
விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! title=

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்-ன் 61-வது படம் ‘மெர்சல்’. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. 

`ஆளப்போறான் தமிழன்', `நீதானே', `மெர்சல் அரசன்' உள்ளிட்ட பாடல்களின், பாடல் வரிகள் அடங்கிய வீடியோ ஏற்கனவே வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், `மாச்சோ' பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. 

வீடியோ:-

Trending News