ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தி கமல் புது டிவிட்

Last Updated : Jul 24, 2017, 01:18 PM IST
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தி கமல் புது டிவிட் title=

தரம் தரந்தாழாதீர் வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமலஹாசன் தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இதற்கு அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததுடன் கடுமையான வாசகங்களையும் பயன்படுத்தினர்.

இதனையடுத்து நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகிறது. தமிழக அரசு மீது ரசிகர்கள் தங்களுக்கு உள்ள அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் அமைச்சர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளை அனுப்ப வேண்டும் என கமல் கூறி இருந்தார். 

இதையடுத்து கமலை அரசியலுக்கு வரவேற்று அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தி தனது டிவிட்டடில் பதிவு செய்தார்:-

தரந்தாழாதீர்.வய்து சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப்போகட்டும். நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை இவருக்கு பதிலளிக்க நானே போதும்.

 

 

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

Trending News