உலகின் மிக விலையுயர்ந்த அமீர்கானின் “தங்கல் கேக்” - வீடியோ

Updated: Aug 11, 2017, 08:46 PM IST
உலகின் மிக விலையுயர்ந்த அமீர்கானின் “தங்கல் கேக்” - வீடியோ
Zee Media

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு துபாயில் உள்ள இந்தியாவை சேர்ந்த தனியார் பேக்கரி நிறுவனம் ரூ.26 லட்சம் செலவில் உலகின் மிக விலையுயர்ந்த ‘தங்கல் கேக்’ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கேக்கில் நடிகர் அமீர்கான் உருவம், படத்தில் அமீர்கானின் மகள்களாக நடித்த கீதா மற்றும் பாபிதா உருவம், தங்க பதக்கங்கள், இந்திய தேசியகொடி, புல், கொட்டகை, மணல் தளம் என தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த கேக்கின் வெளிப்புறம் முழுவதும் தங்கத்துகள்களால் பூசப்பட்டு உள்ளது. ஏறக்குறைய 75 கிராம் தங்கம் பயன் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கேக் 
தயாரிக்க பிராட்வே பேக்கரி குழு 3.5 வாரங்கள் மற்றும் 1,200 மனித நேரங்களை எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போது இந்த வீடியோ வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வீடியோ:-