'அந்நியன்' பட ஹிந்தி ரீமேக்கில் ஜாக்கிசான் நடிக்கிறாரா?

'அந்நியன்' படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து உருவாக்க இயக்குனர் சங்கர் விரும்பினார்.  ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கரின் இந்த முடிவிற்கு எதிர்விப்பு தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2021, 05:35 PM IST
'அந்நியன்' பட ஹிந்தி ரீமேக்கில் ஜாக்கிசான் நடிக்கிறாரா? title=

சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரமை வைத்து அதிக பொருட்செலவில்  உருவாக்கப்பட்ட, வெற்றி திரைப்படம் தான் 'அந்நியன்'.  இப்படம் தமிழ், தெலுங்கு, பிரெஞ்சு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையிடப்பட்டது.  இந்த திரைப்படத்தில் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ALSO READ இந்த வாரம் OTT-யில் வெளியாகும் 10 படங்களின் பட்டியல் இதோ!

இதில் அப்பாவி கதாபாத்திரமாக அம்பி, அநியாயத்தை கண்டு பொங்கும் கதாபாத்திரமாக அந்நியன், ரொமான்டிக் கலந்த கதாபாத்திரமாக ரெமோ என்று மூன்று வெவ்வேறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் விக்ரம் நேர்த்தியாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.  பன்முக மனோபாவ நோயை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் விக்ரமின் பன்முக நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் பாடல்களும், அதில் அந்நியன் உருவாக்கிய  www.anniyan.com என்ற வெப்சைட்டும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.  இன்றளவும் இப்படம் ரசிகர்களிடையே நல்லதொரு நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

shnakar

இந்நிலையில் 'அந்நியன்' படத்தின் ரீமேக்கை ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து உருவாக்க இயக்குனர் சங்கர் விரும்பினார்.  ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கரின் இந்த முடிவிற்கு எதிர்விப்பு தெரிவித்தார்.  மேலும் அவர் "அந்நியன் படத்தின் கதைக்கான உரிமம் முழுவதும் எனக்கு சொந்தமானது, ஆகையால் என் அனுமதி இல்லாமல் அப்படத்தை யாரும் இயக்க முடியாது" என்று கூறினார்.  அதனையடுத்து அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் ஜாக்கிசானை, ஆஸ்கார் ரவிச்சந்திரன் நடிக்க வைக்க போவதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ALSO READ வந்தான் ஜெய்சான் ரிப்பீட்டு! Exclusive மாநாடு விமர்சனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News