கருணாநிதி தமிழ் ஆசான்- கமல் புகழாரம்

Last Updated : May 28, 2017, 11:02 AM IST
கருணாநிதி தமிழ் ஆசான்- கமல் புகழாரம் title=

திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியலையும் தாண்டி பல்வேறு துறைகளில் ஆர்வமுடையவர் கருணாநிதி. மூத்த அரசியல்வாதியாக மட்டுமில்லாமல், அற்புதமான கதாசிரியராக திகழ்பவர். சினிமாவில் கருணாநிதியின் வசனங்களை பேசிவிட்டால் ஒரு நடிகர் முழு தகுதி பெற்றவராகிறார். அவரின் வசனம் என்பது திரைத்துறையில் நுழைய அனுமதி சீட்டு போன்றது.

கருணாநிதியை நான் தமிழ் ஆசான் என்று கூறியதற்கு எம்ஜிஆரும் போனில் அழைத்து பாராட்டினார். அதே போல தசாவதாரம் படத்தின் போது எனது கன்னத்தை கிள்ளி பாராட்டு வழங்கியவர் கலைஞர் கருணாநிதி. 

வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை, மனம் இருந்தால் போதும் என கருணாநிதியின் பிறந்தநாளுக்கு கமல் ஹாசன் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

Trending News