வதந்திக்கு முற்றுப்புள்ளி வாய்த்த கமல்!!

Updated: Sep 13, 2017, 03:29 PM IST
வதந்திக்கு முற்றுப்புள்ளி வாய்த்த கமல்!!
Pic Courtesy : Youtube

கேரளா கோழிகோட்டில் நடக்கவிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு கமல்ஹாசன் கனத்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்து வெளிவந்தன. இதனையடுத்து கமலஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் அறிவிப்பார் என பலர் கருத்து தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், இதைக்குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-  

எனக்கு எந்தவிதமான அழைப்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விடுக்கப்படவில்லை. மேலும் நான் அக்டோபர் மாதம் அனைத்து சனிக்கிழமைகளில் பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கிறேன் எனக் கூறினார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு, வாழ்த்துகள் எனவும் கூறியுள்ளார்.

 

 

இதன் மூலம் சமூக வலைத்தளம் மற்றும் சில ஊடங்களில் வந்த செய்திகள் வெறும் வதந்தி என்பது தெளிவாகியுள்ளது.