மகாபாரதம் விவகாரம்: கமல்ஹாசன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Last Updated: Friday, April 21, 2017 - 14:27
மகாபாரதம் விவகாரம்: கமல்ஹாசன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
Zee Media Bureau

மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக வழக்கு நடிகர் கமல்ஹாசன் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு

மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், மகாபாரதம் பற்றி சில கருத்துகளை கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் கமல்ஹாசன் கருத்துகள் இந்துக்களை அவமதிப்பதாக உள்ளது. மகாபாரதம் பற்றி தவறான கருத்துகளை கூறியதால் நடிகர் கமல்ஹாசனுக்கு அபராதத்துடன் கூடிய அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி கடந்த மார்ச் மாதம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் நீதிமன்றத்தில் மே மாதம் 5-ம் தேதி  நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. 

comments powered by Disqus