‘மெர்சல்’ டிரைலர் வராது - அட்லி அறிவிப்பு

Last Updated: Thursday, October 12, 2017 - 16:32
‘மெர்சல்’ டிரைலர் வராது - அட்லி அறிவிப்பு
Pic Courtesy : Twitter

அக்டோபர் 18-ம் தேதி 'மெர்சல்' வெளியீடு உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள். ஆனால் ‘மெர்சல்’ படத்தின் டிரைலர் வராது என்று இயக்குனர் அட்லி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் ‘மெர்சல்’. இந்த படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே படத்தின் டீஸர் பல சாதனைகளை செய்து வரும் நிலையில், டிரைலர் எப்போது வெளியாகும்? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு வருத்தமான செய்தி வெளியாகியுள்ளது.  ‘மெர்சல்’ படத்தின் டிரைலர் வராது என்று இயக்குனர் அட்லி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

விஜய் ரசிகர்களை பொருத்துவரையில் இந்த தீபாவளி ‘மெர்சல்’ தீபாவளி தான் என்று சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை பரிமாறி வருகின்றனர்.

அஜித்தின் வேதாளம் படமும் டிரைலர் வெளியிடாமல், படம் ரீலீஸ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.